< Back
மாநில செய்திகள்
தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
25 July 2023 12:15 AM IST

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து நாகையில் தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து நாகையில் தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

நாகை தலைமை தபால் நிலையம் முன்பு தி.மு.க. மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் தமயந்தி வரவேற்றார். மாவட்ட செயலாளர் கவுதமன் தலைமை தாங்கினார். தாட்கோ தலைவர் மதிவாணன் முன்னிலை வகித்தார்.

பா.ஜ.க. ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை நிர்வாணப்படுத்திய சம்பவத்தை கண்டித்தும், கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத மணிப்பூர் அரசு மற்றும் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ., தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் மேகநாதன், நகர செயலாளர்கள் மாரிமுத்து, செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மகளிர் தொண்டர் அணி மாவட்ட அமைப்பாளர் புவனேஸ்வரி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்