< Back
மாநில செய்திகள்
தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் ஆலோசனை
சிவகங்கை
மாநில செய்திகள்

தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் ஆலோசனை

தினத்தந்தி
|
3 Oct 2023 12:30 AM IST

தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

காரைக்குடி

காரைக்குடியில் மாவட்ட தி.மு.க. இளைஞரணி செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர், அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் தென்னவன் முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார் வரவேற்றார். மாநில இளைஞரணி துணை செயலாளர் ராஜா, மாவட்ட துணை செயலாளர் மணிமுத்து உள்ளிட்டோர் பேசினர். கூட்டத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை, இல்லம் தேடி இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை, கலைஞர் நூலகம், கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டிய போட்டி குறித்த ஆலோசனை மற்றும் கட்சி ஆக்க பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதில், மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர்கள், சேதுபதி ராஜா, பொற்கோ, மதிவாணன், கார்த்திக், பரணி கிட்டு, முகமது மகாதீர் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, கிளை இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்