< Back
மாநில செய்திகள்
பனமரத்துப்பட்டி ஒன்றியக்குழு கூட்டத்தை  தி.மு.க. கவுன்சிலர்கள் புறக்கணிப்பு  கோரம் இல்லாததால் கூட்டம் ஒத்திவைப்பு
சேலம்
மாநில செய்திகள்

பனமரத்துப்பட்டி ஒன்றியக்குழு கூட்டத்தை தி.மு.க. கவுன்சிலர்கள் புறக்கணிப்பு கோரம் இல்லாததால் கூட்டம் ஒத்திவைப்பு

தினத்தந்தி
|
26 Nov 2022 2:27 AM IST

பனமரத்துப்பட்டி ஒன்றியக்குழு கூட்டத்தை தி.மு.க. கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.

பனமரத்துப்பட்டி,

பனமரத்துப்பட்டி ஒன்றிய குழு கூட்டம் நேற்று காலை நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையாளர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் காவிரி சித்தன், மஞ்சுளாமுருகன் ஆகிய இருவர் மட்டும் கலந்து கொண்டனர். தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி, பா.ம.க. உள்ளிட்ட 8 கவுன்சிலர்களும், அ.தி.மு.க.வை சேர்ந்த 2 கவுன்சிலர்கள் என 10 பேர் ஒன்றியக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். இதனால் கூட்ட அரங்கு வெறிச்சோடி காணப்பட்டது. கூட்டம் நடத்துவதற்கு போதுமான கவுன்சிலர்கள் இல்லாததால் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. தலைவர் மீதான நம்பிக்கை இல்லாத தீர்மானம் தோல்வி அடைந்த நிலையில் தி.மு.க. கூட்டணி கவுன்சிலர்கள் ஒன்றியக்குழு கூட்டத்தை புறக்கணித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்