< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
தி.மு.க. கவுன்சிலர் மோட்டார் சைக்கிளுக்கு தீவைப்பு
|25 Sept 2022 1:16 AM IST
தி.மு.க. கவுன்சிலர் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைக்கப்பட்டது.
விருதுநகர் சிவந்திபுரம் ஆத்துமேட்டு பகுதியை சேர்ந்தவர் பணப்பாண்டி (வயது 43). விருதுநகர் நகராட்சி 35-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக உள்ளார். இவர் தன் வீட்டு முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். நேற்று அதிகாலை திடீரென மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்தது. கவுன்சிலர் பணப்பாண்டி வெளிய வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் முற்றிலுமாக தீயில் எரிந்து நாசமாகியிருந்தது. இதுபற்றி பணப்பாண்டி கொடுத்த புகாரின் பேரில் கிழக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கவுன்சிலரின் உறவினரான அதே பகுதியை சேர்ந்த காளீஸ்குமார் (38) என்பவர் மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்தது தெரியவந்தது. நகராட்சி தேர்தலில் இருந்து இருவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதன்பேரில் காளீஸ்குமாரை போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.