< Back
மாநில செய்திகள்
காஞ்சிபுரத்தில் தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டம் - கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அழைப்பு

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

காஞ்சிபுரத்தில் தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டம் - கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அழைப்பு

தினத்தந்தி
|
18 Sept 2024 9:57 AM IST

தி.மு.க. பவள விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக காஞ்சிபுரத்தில் வருகிற 28-ந்தேதி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

சென்னை,

தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோர் பெயர்களிலான விருதுகள், கட்சியில் சிறப்பாக செயல்பட்டோருக்கான பரிசுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி உரையாற்றினார்.

இதைத்தொடர்ந்து பவள விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக காஞ்சிபுரத்தில் வருகிற 28-ந்தேதி தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் காஞ்சிபுரத்தில் இந்த பவள விழா பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் டெல்லி தலைமைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


மேலும் செய்திகள்