சென்னை
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து தி.மு.க. மகளிரணி ஆர்ப்பாட்டம்
|நங்கநல்லூர்,
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. மகளிரணி சார்பாக நங்கநல்லூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கீதா ஆனந்தன் தலைமை தாங்கினார். கவுன்சிலர்கள் துர்காதேவி, பூங்கொடி, பிருந்தாஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தொடங்கி வைத்து பேசினார். இதில் கவுன்சிலர்கள் தேவி, பாரதி, அமுதபிரியா, ரேணுகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தாம்பரம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. மகளிரணி சார்பில் செம்பாக்கம், காமராஜபுரம் பஸ் நிலையம் அருகில் தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தி.மு.க. கொள்கை பரப்பு இணை செயலாளர் நெல்லிக்குப்பம் புகழேந்தி சிறப்புரையாற்றினார். கவுன்சிலர்கள் கற்பகம், கல்யாணி, ரமணி, லிங்கேஸ்வரி, கமலா, ராஜேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பல்லாவரம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. மகளிரணி சார்பில் குரோம்பேட்டை பஸ் நிலையத்தில் மாவட்ட துணை அமைப்பாளர் அமுதா தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் ஈரோடு இறைவன் கண்டன உரையாற்றினார். இதில் கவுன்சிலர்கள் மதீனா பேகம், லதா சண்முகசுந்தரி, சரஸ்வதி, மகாலட்சுமி, மங்கையர் திலகம், பிருந்தாதேவி, வாணி, பொழிச்சலூர் ஊராட்சி தலைவர் வனஜா, மகளிர் அணி அமைப்பாளர் செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.