< Back
மாநில செய்திகள்
தி.மு.க. உடனான பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்தது - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
மாநில செய்திகள்

தி.மு.க. உடனான பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்தது - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

தினத்தந்தி
|
25 Feb 2024 6:51 PM IST

தி.மு.க.வுடன் எந்தவிதமான நெருடலும் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தி.மு.க. முனைப்பு காட்டி வருகிறது. கடந்த 4-ந்தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையிலான நாடாளுமன்ற தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்த முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த நிலையில், நாடாளுமன்ற தோ்தலுக்கான தி.மு.க. - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையேயான தொகுதிப் பங்கீடு குறித்த 2-ம் கட்ட பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

பேச்சுவார்த்தைக்கு பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தை குழு தலைவர் சம்பத் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தி.மு.க. உடனான பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்தது. பேச்சுவார்த்தை இணக்கமான முறையில் அமைந்தது. இரண்டு தரப்பும் மனம் திறந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். தி.மு.க.வுடன் எந்தவிதமான நெருடலும் இல்லை. 3-ம் கட்ட பேச்சுவார்த்தை பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும். 2-ம் கட்ட பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. 3-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகே மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி தொகுதி பங்கீடு பற்றி தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்