திருநெல்வேலி
தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டம்
|நெல்லை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் தேர்தல் தொடர்பாக தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
நெல்லை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் மாவட்ட பஞ்சாயத்து சார்பில் ஏற்கனவே 8 மாவட்ட கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
இது தவிர மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் இருந்து 10 கவுன்சிலர்கள் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அதற்கான தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது.
இதற்கான தி.மு.க வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள ஓட்டலில் நடைபெற்றது. நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் ஆவுடையப்பன், நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் மைதீன்கான் ஆகியோர் தலைமை தாங்கி பேசினார்கள்.
இதில் வேட்பாளர்களாக நெல்லை மாநகராட்சி கவுன்சிலர்கள் சகாய ஜூலியட் மேரி, வசந்தா, ரசூல் மைதீன் ஆகிய 3 பேரும், பணகுடி பேரூராட்சி கோபால கண்ணன், கோபாலசமுத்திரம் பேரூராட்சி சுதா, திசையன்விளை பேரூராட்சி சபீனா, மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி மீனா, விக்கிரமசிங்கபுரம் நகராட்சி சுஜாதா, களக்காடு நகராட்சி பூதத்தான், அம்பை நகராட்சி ஜோதி கலா ஆகிய 10 பேர் அறிமுகம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் வக்கீல் அணி செல்வ சூடாமணி, மாநில விவசாய தொழிலாளர் அணி துனை செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ நன்றி கூறினார்.