< Back
மாநில செய்திகள்
கடலூர்
மாநில செய்திகள்
மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்த தி.மு.க. நிர்வாகியால் பரபரப்பு
|11 Oct 2022 12:15 AM IST
கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்த தி.மு.க. நிர்வாகியால் பரபரப்பு
கடலூர்
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்துக்கு பண்ருட்டி ஆண்டிப்பாளையத்தை சேர்ந்த தி.மு.க. நிர்வாகி கனகசபை என்பவர் வந்தார். அவரை கலெக்டர் அலுவலக நுழைவு வாசலில் போலீசார் சோதனை செய்தபோது அவர் கொண்டு வந்த பையில் மண்எண்ணெய் பாட்டில் இருந்தது. இதை பறிமுதல் செய்த போலீசார், அவரிடம் விசாரித்தனர். விசாரணையில், அவரை சில நாட்களாக ஒரு கும்பல் கொலை செய்ய திட்டமிட்டு, வீட்டை சுற்றி வருவதாகவும், இது பற்றி பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே எனது உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றார். தொடர்ந்து அவரை கலெக்டரிடம் மனு அளிப்பதற்காக போலீசார் அழைத்துச்சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.