< Back
மாநில செய்திகள்
தி.மு.க. பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

தி.மு.க. பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம்

தினத்தந்தி
|
18 Oct 2023 12:15 AM IST

திருக்கடையூர் அருகே தி.மு.க. பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது.

திருக்கடையூர்:

செம்பனார்கோவில் தி.மு.க. மத்திய ஒன்றியம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள், உறுப்பினர்கள் கூட்டம் டி.மணல்மேடு ஊராட்சியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே நடந்தது. நிகழ்ச்சிக்கு பூம்புகார் எம்.எல்.ஏ.வும் மயிலாடுதுறை தி.மு.க. மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் தலைமை தாங்கினார். செம்பனார்கோவில் ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர்கள் அமுர்த விஜயகுமார், அப்துல் மாலிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர், இதில் பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதாமுருகன் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அதிக வாக்குகளில் வெற்றி பெற செய்வது குறித்தும் பேசினார். இதில் ஒன்றிய கிளைக் கழக நிர்வாகி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்