< Back
மாநில செய்திகள்
தி.மு.க. பூத் கமிட்டி கூட்டம்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

தி.மு.க. பூத் கமிட்டி கூட்டம்

தினத்தந்தி
|
19 Oct 2023 12:15 AM IST

வைத்தீஸ்வரன் கோவிலில் தி.மு.க. பூத் கமிட்டி கூட்டம் நடந்தது.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் பேரூர் கழக தி.மு.க. சார்பில் பாக முகவர் மற்றும் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூர் கழக செயலாளர் அன்புச்செழியன் தலைமை தாங்கினார். மாவட்ட அவை தலைவர் சீனிவாசன், மாவட்ட பொருளாளர் அலெக்சாண்டர், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் முத்துக்குபேரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி வரவேற்றார். கூட்டத்தில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., தலைமை பொதுக்குழு உறுப்பினர் வின்சென்ட், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி அமைப்பாளர் ஸ்ரீதர் ஆகியோர் கலந்துகொண்டு கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து பேசினர். தற்பொழுது தி.மு.க ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மகளிர் உரிமைத்தொகை, மகளிருக்கு கட்டணமில்லா பஸ் உள்ளிட்ட திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்து கூற வேண்டும், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க. வெற்றி பெற பாடுபட வேண்டும் என்றனர். இந்த கூட்டத்தில் நகர அவைத் தலைவர் சுந்தரமூர்த்தி, துணை செயலாளர்கள் ராமலிங்கம், ஆனந்த், மாவட்ட பிரதிநிதி கமலநாதன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்