< Back
மாநில செய்திகள்
தி.மு.க. பூத் கமிட்டி கூட்டம்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

தி.மு.க. பூத் கமிட்டி கூட்டம்

தினத்தந்தி
|
16 Oct 2023 12:15 AM IST

சீர்காழியில் தி.மு.க. பூத் கமிட்டி கூட்டத்தில் மன்னார்குடி நகர சபை தலைவர் பங்கேற்றார்.

சீர்காழி:

சீர்காழி அருகே நிம்மேலி, மருதங்குடி, அத்தியூர், ஆகிய ஊராட்சிகளில் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பாக முகவர் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் வீரமணி,துணை செயலாளர் முருகன் சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கவுன்சிலர் விஜயேஸ்வரன் வரவேற்றார். கூட்டத்தில் மன்னார்குடி நகர சபை தலைவரும், சீர்காழி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளருமான மன்னை சோழராஜன், பொதுக்குழு உறுப்பினர் வின்சென்ட், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் முத்து குபேரன் ஆகியோர் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அதிக வாக்குகளில் வெற்றி பெற செய்வது குறித்தும் பேசினார். இந்த கூட்டத்தில் திட்டை ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜுபைர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர பாண்டியன், மாவட்ட, ஒன்றிய ,கிளைக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதைப்போல் செம்மங்குடி, திட்டை, தில்லைவிடங்கன், விளந்திட சமுத்திரம் உள்ளிட்ட ஊராட்சிகளிலும் கூட்டம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்