மயிலாடுதுறை
தி.மு.க. பூத் கமிட்டி கூட்டம்
|சீர்காழியில் தி.மு.க. பூத் கமிட்டி கூட்டம் நடந்தது.
சீர்காழி:
சீர்காழியில் நகர தி.மு.க. சார்பில் முகவர்கள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர செயலாளர் சுப்பராயன் தலைமை தாங்கினார். நகர துணை செயலாளர் சிவப்பிரியா, நகர பொருளாளர் சங்கர், மாவட்ட பிரதிநிதி பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வார்டு செயலாளர் தனவள்ளி முத்துக்குமார் வரவேற்றார். பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., சீர்காழி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் மன்னை சோழராஜன், சீர்காழி நகர சபை தலைவர் துர்கா ராஜசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து பேசினர். இதில் மாவட்ட அறங்காவல் குழு தலைவர் சாமிநாதன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் காழி கலைவாணன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சொல்வமுத்துக்குமார், நகர இளைஞரணி அமைப்பாளர் ராஜசேகரன், நகர மன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைப்போல் தென்பாதி மேற்கு ஒன்றிய தி.மு.க. அலுவலகத்தில் சீர்காழி நகர முகவர்கள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமாக கலந்து கொண்டனர்.