தேனி
தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
|தேனி மாவட்ட பா.ஜ.க. சார்பில், தமிழகத்தில் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வை கண்டித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் தேனி பழைய பஸ் நிலையம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனி மாவட்ட பா.ஜ.க. சார்பில், தமிழகத்தில் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வை கண்டித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் தேனி பழைய பஸ் நிலையம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வர்த்தகர் பிரிவு தலைவர் ஜெயராமன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதே போல் பெரியகுளத்தில் நகர பா.ஜ.க. சார்பில் சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பெரியகுளம் நகர தலைவர் முத்துப்பாண்டி தலைமை தாங்கினார். மாவட்ட வக்கீல் பிரிவு துணைத் தலைவர் சன்னாசிபாபு முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் ராஜபாண்டி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் நகர பொதுச்செயலாளர்கள் நாராயணன், பாலச்சந்திரன், பொருளாளர் சுவாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
போடி திருவள்ளுவர் சிலை அருகே பா.ஜ.க. மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமையில் பால் விலை, மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. போடி மெட்டு பகுதியில் கிளை தலைவர் செந்தில் தலைமையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.