< Back
மாநில செய்திகள்
தி.மு.க. பெண் கவுன்சிலர் மீது தாக்குதல்
விருதுநகர்
மாநில செய்திகள்

தி.மு.க. பெண் கவுன்சிலர் மீது தாக்குதல்

தினத்தந்தி
|
19 Sept 2023 1:07 AM IST

விருதுநகரில் நகராட்சி தி.மு.க. பெண் கவுன்சிலர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனர்.


விருதுநகரில் நகராட்சி தி.மு.க. பெண் கவுன்சிலர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் கவுன்சிலர்

விருதுநகர் நகராட்சி 5-வது வார்டு தி.மு.க. பெண் கவுன்சிலர் ஆஷா (வயது 33). இவரது கணவர் மூர்த்தி (33). இவர்கள் நேருஜி நகரில் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்த நிலையில் அதை கவுன்சிலர் ஆஷா வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த மாரீஸ்வரி, மகேஷ் குமார் என்பவருக்கு இடையே கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு நின்று கொண்டிருந்த ஆஷா தகராறை விலக்கி விட்டதாக கூறப்படுகிறது.

தாக்குதல்

அப்போது மாரீஸ்வரிக்கும், ஆஷாவிற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து மாரீஸ்வரி உள்பட 5 பேர் சேர்ந்து ஆஷாவை தாக்கியதாகவும், இதில் அவருக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதை தடுக்க வந்த மூர்த்தி மற்றும் ஆஷாவின் தாயார் பூமாரி ஆகியோரும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ஆஷா மற்றும் அவரது தாயார் பூமாரி ஆகிய 2 பேரும் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

போலீசில் புகார்

இந்த சம்பவம் குறித்து கவுன்சிலர் ஆஷா கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் மேற்படி 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து மாரீஸ்வரியும் தன்னை கவுன்சிலர் ஆஷா, மூர்த்தி, பூமாரி, மகேஷ் குமார் ஆகியோர் தாக்கியதாக விருதுநகர் மேற்கு போலீசில் புகார் செய்துள்ளார்.

இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்