< Back
மாநில செய்திகள்
அண்ணா சிலைக்கு தி.மு.க., அ.தி.மு.க.வினர் மரியாதை
சேலம்
மாநில செய்திகள்

அண்ணா சிலைக்கு தி.மு.க., அ.தி.மு.க.வினர் மரியாதை

தினத்தந்தி
|
16 Sept 2023 1:00 AM IST

அண்ணாவின் 115-வது பிறந்த நாளையொட்டி அவருடைய சிலைக்கு தி.மு.க., அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அண்ணாவின் 115-வது பிறந்த நாளையொட்டி அவருடைய சிலைக்கு தி.மு.க., அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அண்ணா பிறந்தநாள்

முன்னாள் முதல்-அமைச்சர் அறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு தி.மு.க., அ.தி.மு.க. உள்பட பல்வேறு கட்சியினர், அமைப்பினர் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அதன்படி சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் அண்ணா சிலைக்கு மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து தமிழக அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு தி.மு.க.வினர் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், மாவட்ட அவைத்தலைவர் சுபாசு, பொருளாளர் கார்த்திகேயன், மாவட்ட துணைச்செயலாளர் குமரவேல், மாநகர செயலாளர் ரகுபதி, மண்டல குழு தலைவர்கள் அசோகன், தனசேகரன், பகுதி செயலாளர்கள் சாந்தமூர்த்தி, சரவணன், ஜெகதீஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் அண்ணாமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க.

இதேபோல் சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாளையொட்டி அவருடைய உருவசிலைக்கு மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. பாலசுப்பிரமணியம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செல்வராஜ், ரவிச்சந்திரன், மாவட்ட அவைத்தலைவர் பன்னீர்செல்வம், மாவட்ட பொருளாளர் பங்க் வெங்கடாஜலம், பகுதி செயலாளர்கள் யாதவமூர்த்தி, சண்முகம், பாண்டியன், பாலு, சரவணன், முருகன், தகவல் தொழில் நுட்பபிரிவு மாவட்ட செயலாளர் கனகராஜ், முன்னாள் மேயர் சவுண்டப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்