< Back
மாநில செய்திகள்
தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்
அரியலூர்
மாநில செய்திகள்

தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்

தினத்தந்தி
|
7 Oct 2023 10:49 PM IST

அரியலூரில் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

அரியலூரில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அவைத்தலைவர் சிவமாணிக்கம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், போக்குவரத்துத்துறை அமைச்சருமான சிவசங்கர் கலந்து கொண்டு பேசினார். இதில் சேலத்தில் நடைபெறும் இளைஞரணி மாநாடு, சென்னையில் நடைபெறும் மகளிரணி மாநாடு உள்ளிட்டவைகளுக்கு திரளான தொண்டர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கவும், கூட்டுறவு சங்க தேர்தல் மற்றும் கழக ஆக்கப்பணிகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன், சட்டதிட்ட திருத்த குழு இணை செயலாளர் சந்திரசேகர், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் மற்றும் ஒன்றிய நகர, கிளை கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்