< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தே.மு.தி.க. முப்பெரும் விழா பொதுக்கூட்டம் - 14-ந்தேதி நடக்கிறது
|2 Sept 2024 3:05 AM IST
அனைத்து மாவட்டங்களிலும் முறையாக போலீஸ் அனுமதி பெற்று முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தே.மு.தி.க.வின் 20-ம் ஆண்டு தொடக்க நாள் வருகிற 14-ந்தேதி முப்பெரும் விழாவாக தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்பட உள்ளது. அதாவது, பத்மபூஷன் விருதுக்காக விஜயகாந்தை கவுரவிக்கும் விழா, 20-ம் ஆண்டு கட்சியின் தொடக்க நாள் விழா, விஜயகாந்தின் 72-வது பிறந்தநாள் விழா ஆகியவை பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
அனைத்து மாவட்டங்களிலும் முறையாக போலீஸ் அனுமதி பெற்று முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.