< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
தே.மு.தி.க. கண்டன ஆர்ப்பாட்டம்
|10 Sept 2023 12:15 AM IST
ஓட்டப்பிடாரம் அருகே தே.மு.தி.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஓட்டப்பிடாரம்:
தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் கட்டண உயர்வு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவின்படி இரண்டு பிரிவாக ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை கண்டித்து ஓட்டப்பிடாரம் அருகே புதூர்பாண்டியபுரம் சுங்கச்சாவடி முன்பு தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் தயாளலிங்கம் தலைமை தாங்கினார். ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட அவை தலைவர் அலெக்சாண்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.