< Back
மாநில செய்திகள்
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்பினார் - மருத்துவமனை அறிக்கை
மாநில செய்திகள்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்பினார் - மருத்துவமனை அறிக்கை

தினத்தந்தி
|
11 Dec 2023 10:10 AM IST

உடல் நலக்குறைவு காரணமாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த மாதம் 18-ந்தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சென்னை,

உடல் நலக்குறைவு காரணமாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 18-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மார்பு சளி, இருமல் காரணமாக செயற்கை சுவாசக்கருவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

விஜயகாந்த் உடல்நிலை குறித்த வதந்திகள் பரவிவந்த நிலையில், விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்றுள்ளார் என்றும், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்பினார் என மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் மார்பு சளி, இருமல், உடல்நல பிரச்சினை காரணமாக கடந்த மாதம் 18ம் தேதி முதல் விஜயகாந்த் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் அவருக்கு வழக்கமான உடல்பரிசோதனை மற்றும் சிகிச்சை முடிந்த நிலையில் அவர் பூரண குணமடைந்து வீடு திரும்பினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்