< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் குடும்பத்தினருடன் எளிமையான முறையில் பொங்கல் கொண்டாட்டம்
|15 Jan 2023 2:36 PM IST
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி மற்றும் மகன்களுடன் இணைந்து அவரது வீட்டில் எளிமையான முறையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.
சென்னை,
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பொதுமக்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, தங்கள் குடும்பத்தினருடன் இணைந்து பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
அந்த வகையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மகன்களுடன் இணைந்து சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் எளிமையான முறையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். மண்பானையில் பொங்கல் வைத்து, கோ பூஜை செய்து பொங்கல் விழாவை அவர்கள் கொண்டாடினர்.