< Back
மாநில செய்திகள்
விழுப்புரத்தில்    தே.மு.தி.க. புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்    மாவட்ட செயலாளர் வெங்கடேசன் பங்கேற்பு
விழுப்புரம்
மாநில செய்திகள்

விழுப்புரத்தில் தே.மு.தி.க. புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் பங்கேற்பு

தினத்தந்தி
|
19 Dec 2022 12:15 AM IST

விழுப்புரத்தில் தே.மு.தி.க. புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.


விழுப்புரம் மாவட்ட தே.மு.தி.க.வில் உட்கட்சித்தேர்தல் முடிந்து புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கான அறிமுகக்கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எல். வெங்கடேசன் தலைமை தாங்கி பேசுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் புதிய பொறுப்புகளுக்கு 2 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 418 பேரை தேர்வு செய்து கட்சி தலைமை அறிவித்துள்ளது. கடந்த 2005-ம் ஆண்டு கட்சி தொடங்கிய விஜயகாந்த், 2006-ம் ஆண்டு சட்டமன்றத்தேர்தல், 2009 நாடாளுமன்ற தேர்தலில் நின்று தே.மு.தி.க.வின் பலத்தை நிரூபித்துள்ளார். 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து 29 இடங்களில் வெற்றி பெற்று எதிர்கட்சி அந்தஸ்தைபெற்றோம். ஆனால் தேர்தலோடு நம்மை கைவிட்டு விட்டார்கள். தே.மு.தி.க.விற்கு உரிய மரியாதைகொடுக்காததால் தற்போது அ.தி.மு.க. நடுரோட்டில் தவித்துக்கொண்டிருக்கிறது. கடந்த கால தேர்தல்களில் நாம் சரியாக கூட்டணி அமைக்கவில்லை என்ற உங்களது ஆதங்கம் உண்மை தான். ஆனால் விரைவில் வர உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெறும் கூட்டணியில் நாம் இருப்போம். நாம் இருக்கும் கூட்டணிதான் வெற்றிபெறும் என்றார். கூட்டத்தில் மாநில விஜயகாந்த் மன்ற துணை செயலாளர் சந்திரசேகரன், மாவட்ட துணை செயலாளர் சுந்தரேசன், வெங்கடேசன், சூடாமணி, மற்றும் நிர்வாகிகள் ஆதவன் முத்து, பிரகாஷ், பாலாஜி, சுப்பிரமணி, கோழிப்பட்டு குமார், முருகன், பிரகாஷ், நகர செயலாளர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்