< Back
மாநில செய்திகள்
தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கங்கள் தொடக்கம்
மாநில செய்திகள்

தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கங்கள் தொடக்கம்

தினத்தந்தி
|
21 Feb 2024 12:42 PM IST

கட்சி ரீதியான அறிவிப்புகளும், மக்களுக்கான செய்திகளும் இந்த சமூக ஊடகங்கள் வழியாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், தொலைக்காட்சி, இணையதள ஊடகங்களுக்கும் மற்றும் அனைத்து ஊடக நண்பர்களுக்கும் வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று (21.02.2024) முதல் அதிகாரபூர்வமான பேஸ்புக் (Facebook), X தளம், இன்ஸ்டாகிராம், (Instagram) மற்றும் வாட்ஸ் அப் (WhatsApp Channels) போன்ற சமூக வலைதளங்களை தொடங்கி கட்சி ரீதியான அறிவிப்புகளும், மக்களுக்கான செய்திகளும், தனிப்பட்ட கருத்துக்கள் போன்ற முக்கிய செய்திகள் இந்த நான்கு சமூக ஊடகங்கள் வழியாக உங்களை வந்து அடையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

Premallatha Vijayakant (General Secretary - Desiya Murpokku Dravida Kazhagam) Official Social Media Links

Twitter X

https://x.com/PremallathaDmdk?t=ajELDtyUff-iRQ3jgZd4mg&s=09

Instagram

https://www.instagram.com/_premallathadmdk?igsh=NGdIOGJIYzh5a210

FaceBook

https://www.facebook.com/profile.php?id=61556479832259&mibextid=ZbWKwL

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்