< Back
மாநில செய்திகள்
தே.மு.தி.க. நிர்வாகிகள் கூட்டம்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

தே.மு.தி.க. நிர்வாகிகள் கூட்டம்

தினத்தந்தி
|
22 May 2023 12:30 AM IST

கோவில்பட்டியில் தே.மு.தி.க. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டி:

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவில்பட்டியில் நடந்தது. மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட அவை தலைவர் கொம்பையா பாண்டியன், ஒன்றிய செயலாளர் பொன்ராஜ், நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வருகிற 28-ந் தேதி ஆலங்குளத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வருகை தரும் பிரேமலதா விஜயகாந்திற்கு கோவில்பட்டியில் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். விஜயகாந்த் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Tags :
மேலும் செய்திகள்