அறநிலையத்துறைக்கு தீட்சிதர்கள் மீண்டும் கடிதம்
|சிதம்பரம் கோவிலில் இந்து சமய மற்றும் அறநிலையத்துறைக்கு நிர்வாக அதிகாரம் இல்லை என்பது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் தெளிவாக உள்ளதாக தீட்சிதர்கள் கூறியுள்ளனர்.
சிதம்பரம் கோவிலில் இந்து சமய மற்றும் அறநிலையத்துறைக்கு நிர்வாக அதிகாரம் இல்லை என்பது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் தெளிவாக உள்ளதாக தீட்சிதர்கள் கூறியுள்ளனர்.கடலூர்,
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள உலக புகழ்பெற்ற நடராஜர் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள், நகைகள், வருமானம், வரவு - செலவு கணக்கு விபரங்களை, அறநிலையத் துறை அதிகாரிகள் குழு ஆய்வு செய்ய சென்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பொது தீட்சிதர்கள், கணக்கு விவரங்களை கொடுக்க மறுத்து விட்டனர். இந்தநிலையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் சட்டப்படி உறுதியாக ஆய்வு நடத்தப்படும். அறநிலையத்துறையின் ஆய்வுக்கு ஒத்துழைப்பதுதான் மனுநீதி; மனுதர்மம். கோவிலில் எழும் புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது எங்களது கடமை என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
இந்நிலையில், அறநிலையத்துறைக்கு தீட்சிதர்கள் எழுதிய கடிதத்தில்,
சிதம்பரம் கோவிலில் இந்து சமய மற்றும் அறநிலையத்துறைக்கு நிர்வாக அதிகாரம் இல்லை என்பது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் தெளிவாக உள்ளது. தற்போதைய குழு சட்டத்திற்குட்பட்ட குழு அல்ல, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு கீழ்ப்படிந்து ஆய்வுக் குழுவை திரும்பப் பெற வேண்டும். சட்டப்பூர்வமான குழு ஆய்வுக்கு வந்தால் அனுமதிப்போம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது,