தஞ்சாவூரில் மழை எச்சரிக்கைக்கு நடுவே களைகட்டிய தீபாவளி விற்பனை
|இன்றைய தினம் விடுமுறை நாளை முன்னிட்டு தஞ்சாவூரில் திபாவளி விற்பனை களைகட்டியுள்ளது.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனிடையே தஞ்சாவுர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில் மழை காரணமாக வியாபாரம் பாதிக்கப்படுமோ என ஜவுளி, பட்டாசு உள்ளிட்ட கடைகளின் வியாபாரிகள் கவலை தெரிவித்து வந்ததனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் விடுமுறை நாளை முன்னிட்டு தஞ்சாவூரில் திபாவளி விற்பனை களைகட்டியுள்ளது. தஞ்சை மாநகர் பகுதியில் உள்ள அண்ணா சாலை, காந்திஜி சாலை, கீழ ராஜவீதி, தெற்கு வீதி, மேல வீதி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
நகரின் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கான ஜவுளி, இனிப்பு வகைகள், பட்டாசு, வீட்டு உபயோக பொருட்கள் உள்பட அனைத்து விற்பனையகங்களிலும் விற்பனை களைகட்டியுள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.