< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
தீபாவளி கதர் கைத்தறி துணிகள் சிறப்பு விற்பனை தொடக்கம்
|14 Oct 2023 12:21 AM IST
தீபாவளி கதர் கைத்தறி துணிகள் சிறப்பு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
வெண்ணைமலையில் உள்ள கரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தீபாவளி கதர் கைத்தறி துணிகள் சிறப்பு விற்பனை தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. முதல் விற்பனையை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் பாலமுருகன் தொடங்கி வைத்தார். கரூர் கதர் கிராம தொழில் உதவி இயக்குனர் கோபால கிருஷ்ணன் வரவேற்று பேசுகையில், அனைத்து அரசு ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் கதர் ரகங்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடி உள்ளது. ரகங்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடியும் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அரசு ஊழியர்களுக்கு எளிய கடன் வசதி செய்து தரப்பட்டு உள்ளது என்றார். இதில், கரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, செல்வி, ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சந்தானம், கோபால் ஆகியோர் செய்திருந்தனர்.