< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தீபாவளி தொடர் விடுமுறை: வண்டலூர் பூங்காவிற்கு 2 நாட்களில் 20 ஆயிரம் பார்வையாளர்கள் வருகை
|13 Nov 2023 11:29 PM IST
தீபாவளி தொடர் விடுமுறையை ஒட்டி பூங்காவிற்கு வருகை தரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
வண்டலூர்,
வண்டலூர் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த பூங்காவில் வெள்ளைப் புலிகள் வங்க புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், மனித குரங்கு காண்டாமிருகம், நீர்நாய், முதலைகள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளது.
பூங்காவிற்கு விடுமுறை தினங்களில் ஏராளமான பார்வையாளர்கள் வருவதுண்டு. அந்த வகையில், தீபாவளி தொடர் விடுமுறை ஒட்டி பூங்காவிற்கு வருகை தரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன்படி, இரண்டு நாட்களில் மட்டும் 20,000 பார்வையாளர்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.