< Back
மாநில செய்திகள்
தீபாவளி பண்டிகை: தாம்பரம்-நெல்லை இடையே இன்று சிறப்பு ரெயில் இயக்கம்
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை: தாம்பரம்-நெல்லை இடையே இன்று சிறப்பு ரெயில் இயக்கம்

தினத்தந்தி
|
20 Oct 2022 5:53 AM IST

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாம்பரம்-நெல்லை இடையே சிறப்பு ரெயில் இன்று இயக்கப்படுகிறது.

சென்னை,

தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்ல வசதியாக தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாம்பரம்- நெல்லை இடையே கீழ்கண்ட சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

* தாம்பரம்- நெல்லை (வண்டி எண்: 06021) இடையே பண்டிகை கால சிறப்பு ரெயில் இன்று (வியாழக்கிழமை) இரவு 9 மணிக்கு இயக்கப்படுகிறது.

* நெல்லை- சென்னை எழும்பூர் (06022) இடையே பண்டிகை கால சிறப்பு ரெயில் வருகிற 21-ந்தேதி (நாளை)மதியம் 1 மணிக்கு இயக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்