< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தீபாவளி பண்டிகை: சென்னையில் ஞாயிறு அட்டவணைப்படி நாளை மின்சார ரெயில்கள் இயக்கம்
|23 Oct 2022 12:42 PM IST
சென்னையில் ஞாயிறு அட்டவணைப்படி நாளை மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கைளை சேர்ந்த ஏராளமானோர் தொழில், வியாபாரம், கல்வி என்று தங்களது வாழ்வாதார தேவைகளுக்காக சென்னையில் வசித்து வருகின்றனர். இவர்கள் பண்டிகை கலங்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு குடும்பத்தினருடன் செல்வது வழக்கம்.
அந்த வகையில் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு 6 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பல சாலைகள் சென்னயில் வெறிச்சோடி காணப்படுகின்றது.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகை அன்று சென்டிரல்-அரக்கோணம், சென்டிரல்-சூலூர்பேட்டை, கடற்கரை-செங்கல்பட்டு ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் ஞாயிறு முறைப்படி இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.