< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தீபாவளி பண்டிகை: தமிழகம் முழுவதும் 364 அழைப்புகள் தீயணைப்புத் துறைக்கு வந்ததாக தகவல்
|13 Nov 2023 12:36 PM IST
தீபாவளியையொட்டி தமிழகம் முழுவதும் 364 அழைப்புகள் தீயணைப்புத் துறைக்கு வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மக்கள் புத்தாடை அணிந்து, கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி, இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும், வாழ்த்துகளை பரிமாறியும் தீபாவளியை கொண்டாடினர்.
இந்த நிலையில் தீபாவளியையொட்டி தமிழகம் முழுவதும் 364 அழைப்புகள் தீயணைப்புத் துறைக்கு வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பட்டாசு விபத்து, தீ விபத்து ஏற்பட்டதாக மொத்தம் 254 இடங்களில் இருந்து அழைப்புகள் வந்ததாக தீயணைப்புத் துறை தெரிவித்து உள்ளது. சென்னையில் 102 பட்டாசு விபத்துகள், 9 தீ விபத்துகள் தொடர்பான அழைப்புகள் வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
தீ விபத்தில் சிக்கி 47 பேர் உள் நோயாளிகளாகவும், 622 பேர் புற நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.