< Back
மாநில செய்திகள்
விவாகரத்து பெற்று பிரிந்த மனைவி... காரணமான மாமனாரை கழுத்தறுத்து கொன்ற மருமகன்
மாநில செய்திகள்

விவாகரத்து பெற்று பிரிந்த மனைவி... காரணமான மாமனாரை கழுத்தறுத்து கொன்ற மருமகன்

தினத்தந்தி
|
18 May 2024 9:37 PM IST

தஞ்சையில் மாமனாரை, மருமகன் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர்,

தஞ்சாவூர் ரெட்டிப்பாளையம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் மனோகரன். முன்னாள் வி.ஏ.ஓ.வான இவருடைய மகள் மனோ ரம்யாவும், ராஜ்குமார் என்பவரும் காதல் திருமணம் செய்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில், திடீரென இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 3 மாதங்களுக்கு முன்பு மனோ ரம்யா விவாகரத்து பெற்றார்.

இதனால் ஆத்திரமடைந்த ராஜ்குமார், விவகாரத்துக்கு காரணமான மாமானாரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று காலை மனோகரன் குளியல் அறைக்கு சென்றபோது, அவரை ராஜ்குமார் உள்பட இரண்டு பேர் சேர்ந்து கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.

இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமார், சரவணகுமார் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாமனாரை மருமகனே கொலை செய்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்