குடும்பத் தகராறில் பிரிந்து சென்ற மனைவி... மன உளைச்சலில் சிலிண்டரை பற்ற வைத்து கணவன் தற்கொலை
|திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் மனைவி பிரிந்து சென்ற வேதனையில் கணவன் சிலிண்டரை பற்ற வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் மனைவி பிரிந்து சென்ற வேதனையில் கணவன் சிலிண்டரை பற்ற வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவிநாசி அருகே அணைப்புதூர் எருமைக்காடு தோட்டம் பகுதியில் வசித்து வந்தவர் ராஜேந்திரன். 19 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இவருக்கு, சில நாட்களாக மனைவியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ராஜேந்திரனை பிரிந்த அவரது மனைவி, கோவையில் தங்கி பணிபுரியும் மகளின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனால், மன உளைச்சலில் இருந்த ராஜேந்திரன், சம்பவத்தன்று வீட்டினுள் வைத்து மது அருந்திய நிலையில், திடீரென சிலிண்டரை பற்ற வைத்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலத்த சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீயில் உடல் கருகி இறந்த ராஜேந்திரனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.