< Back
மாநில செய்திகள்
விவாகரத்து வழக்குக்கு வந்த பெண் விஷம் குடித்தார் - கோர்டடு வளாகத்தில் பரபரப்பு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

விவாகரத்து வழக்குக்கு வந்த பெண் விஷம் குடித்தார் - கோர்டடு வளாகத்தில் பரபரப்பு

தினத்தந்தி
|
9 Aug 2022 4:46 PM IST

திருவள்ளூரில் விவாகரத்து வழக்குக்கு வந்த பெண் கோர்டடு வளாகத்தில் விஷம் குடித்தார்.

திருவள்ளூர் எம்.ஜி.எம். நகர் ராஜாஜி சாலையை சேர்ந்தவர் மோகனபிரியா (வயது 38). இவர் ஆந்திர மாநிலம் புத்தூரை சேர்ந்த ரவீந்திரவர்மா (40) என்பவரை கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து வழக்குப்பதிவு செய்து அந்த வழக்கு தற்போது திருவள்ளூர் குடும்ப நல கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. விவாகரத்து கொடுக்க காலதாமதம் ஆவதால் அடிக்கடி மோகன பிரியா திருவள்ளூர் கோர்ட்டுக்கு வந்து சென்றார். இந்த நிலையில் நேற்று திருவள்ளூர் குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து வழக்குக்காக வந்திருந்த அவர் விவாகரத்து வழக்கு காலதாமதம் ஆவதால் மனமுடைந்து கோர்ட்டு வளாகத்திற்குள் தான் ஏற்கனவே மறைத்து கொண்டு வந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு மயங்கி விழுந்தார்.

இதை பார்த்த அங்கு இருந்த பொதுமக்கள் அவரை மீட்டனர். இதன் காரணமாக கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவள்ளூர் டவுன் போலீசார் விரைந்து வந்து மோகனப்பிரியாவை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

மேலும் செய்திகள்