< Back
மாநில செய்திகள்
கூட்டுக்குடிநீர் திட்டத்துக்காக தோண்டப்பட்ட பள்ளம்:எச்சரிக்கை பலகை இல்லாததால் விபத்து அபாயம்
தேனி
மாநில செய்திகள்

கூட்டுக்குடிநீர் திட்டத்துக்காக தோண்டப்பட்ட பள்ளம்:எச்சரிக்கை பலகை இல்லாததால் விபத்து அபாயம்

தினத்தந்தி
|
29 April 2023 12:15 AM IST

கம்பம் அருகே கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்திற்கு அருகே எச்சரிக்கை பலகை இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

கூடலூர் அருகே உள்ள லோயர்கேம்பில் இருந்து மதுரைக்கு ராட்சத குழாய்கள் அமைத்து குடிநீர் கொண்டு செல்வதற்கான கூட்டுக்குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது. இதற்கான பணிகள் மதுரை நிர்வாகம் சார்பில் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. நெடுஞ்சாலையோரம் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி குழாய்களை பதிக்கும் பணி நடக்கிறது. அதன்படி, கம்பம்- கூடலூர் புறவழிச் சாலையை ஒட்டி குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் குழாய்கள் பதிக்கப்பட்டு பள்ளங்கள் மூடப்படாமல் உள்ளன.

இதேபோல் கம்பம்-ஏகலூத்து சாலையில் குழாய்கள் பதிக்கப்பட்டும் இணைப்பு பணிகள் நிறைவடையாததால் பள்ளங்கள் மூடப்படாமல் உள்ளன. மேலும் அப்பகுதியில் பாதுகாப்பு வளையம், எச்சரிக்கை பலகை வைக்கவில்லை. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே லோயர்கேம்பில் இருந்து மதுரைக்கு செல்லும் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்களுக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் அருகே எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்