< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நாமக்கல் பேருந்து நிலையத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் திடீர் சோதனை - அதிக ஒலி எழுப்பிய ஹாரன்கள் பறிமுதல்
|20 July 2023 10:58 PM IST
ராசிபுரம் பேருந்து நிலையத்தில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஹார்ன்களை பயன்படுத்தி வருவதாக புகார்கள் எழுந்தன.
இதனையடுத்து ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் நித்யா மற்றும் நாமக்கல் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன் உள்ளிட்டோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், இனிமேல் அவற்றை பயன்படுத்தினால் ஓட்டுநர்களின் உரிமம் பறிக்கப்படும் என எச்சரித்தனர்.