< Back
மாநில செய்திகள்
மாவட்ட செயலாளர் அறிமுக கூட்டம்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

மாவட்ட செயலாளர் அறிமுக கூட்டம்

தினத்தந்தி
|
2 Oct 2023 1:00 AM IST

ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் அறிமுக கூட்டம் நடந்தது. இதனை முன்னிட்டு வாலாஜா மேற்கு ஒன்றியம் லாலாபேட்டை பஸ் நிலையம் அருகிலும், ஆற்காடு மேற்கு ஒன்றியம் பூட்டுத்தாக்கு பஸ் நிலையம் அருகிலும், கீழ்விஷாரம் கிழக்கு கீழ்விஷாரம் குளத்துமேடு அருகிலும், மேல்விஷாரம் மேற்கு கத்தியவாடி கூட்ரோடு பகுதியிலும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து கட்சி கொடியேற்றி, அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆற்காட்டை அடுத்த பூட்டுத்தாக்கு பஸ் நிலையம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆற்காடு மேற்கு ஒன்றிய செயலாளர் என்.சாரதி என்கிற ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் சுகுணா கணேசன், ஒன்றிய அவைத்தலைவர் ஏ.எஸ்.மணி, துணைச் செயலாளர் கள் எஸ்.ஆர்.சங்கர், ஜெயந்தி சூரன், இணை செயலாளர் அமுதா சாம்பசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.எம்.சுகுமார் கலந்து கொண்டு கட்சி கொடியினை ஏற்றி வைத்து, முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

பின்னர் நிர்வாகிகளின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு பேசுகையில் எளிய தொண்டனான எனக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பொறுப்பை வழங்கிய கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் யார் வேட்பாளராக போட்டியிட்டாலும் அவர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒற்றுமையாக தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றார்.

விழாவில் முன்னாள் மாவட்ட செயலாளர் சுமைதாங்கி ஏழுமலை, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அண்ணாமலை, மேல்விஷாரம் மேற்கு நகர செயலாளர் இப்ராஹிம் கலிலுல்லா, மேல்விஷாரம் கிழக்கு நகர செயலாளர் விஜி என்கிற சித்தார்த்தன், வாலாஜா மேற்கு ஒன்றிய செயலாளர் தேவேந்திரன், மாவட்ட பொருளாளர் ஷாபுதீன், மாவட்ட இணைச்செயலாளர் கீதா சுந்தர், ஆற்காடு கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.அன்பழகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்