பெரம்பலூர்
வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
|வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான அனில் மேஷ்ராம், கலெக்டர் கற்பகம் முன்னிலையில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை-அறிவியல் கல்லூரியில் நடந்த நான் முதல்வன் திட்டத்தின் மூலம் உயர் கல்விக்கான வழிக்காட்டும் முகாம் பார்வையிட்டு, அங்கிருந்த மாணவ-மாணவிகளிடம் இந்த முகாம் உங்களுக்கு பயனுள்ள வகையில் இருந்ததா? என்று விசாரித்தார். அதனை தொடர்ந்து அவர் குரும்பலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ரேஷன் கடை, பிற்படுத்தப்பட்டோர் நலக்கல்லூரி மாணவிகள் விடுதி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செஞ்சேரி அங்கன்வாடி மையத்தினையும், செங்குணம் பகுதியில் உள்ள அரசு பல்வகை தொழில்நுட்ப கல்லூரியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.