< Back
மாநில செய்திகள்
வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலர்
கரூர்
மாநில செய்திகள்

வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலர்

தினத்தந்தி
|
23 July 2022 12:17 AM IST

வளர்ச்சி பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.

வெள்ளியணை, மண்மங்கலம், புகழூர் ஆகிய பகுதிகளில் நேற்று ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வருவாய்த்துறை வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து தமிழக அரசின் கைத்தறித்துறை ஆணையரும், கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான டி.பி.ராஜேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் முன்னிலை வகித்தார். கரூர் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெள்ளியணை ஊராட்சி பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நூலக கட்டிடம் பணிகளை பார்வையிட்டு கட்டிடத்தின் அளவு மற்றும் தரம் குறித்தும், வெள்ளியில் கட்டப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரம் கட்டிடங்களை ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் பாரமரிக்கும் பணிகளையும், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் கழிவுகளை மறுபயன்பாடு செய்ய சாலை அமைக்க மூலப்பொருட்கள் தயார் செய்யும் பணிகளையும் ஆய்வு செய்தார். பின்னர் மண்மங்கலம் பகுதியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் கட்டிடங்களை ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் செய்யப்படும் பராமரிப்பு பணிகளையும், புகழூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அலுவலக செயல் முறைகள் குறித்த கோப்புகள் பராமரிப்புகள் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். பின்னர் புகழூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

மேலும் செய்திகள்