திருவண்ணாமலை
மாவட்ட அளவிலான இளையோர் தடகள போட்டிகள்
|திருவண்ணாமலையில் மாவட்ட அளவிலான இளையோர் தடகள போட்டிகள் நடந்தது. இதில் 600-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலையில் மாவட்ட அளவிலான இளையோர் தடகள போட்டிகள் நடந்தது. இதில் 600-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
தடகள போட்டிகள்
திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில் 14 வயது முதல் 20 வயது உடைய வீரர், வீராங்கனைகளுக்கு இன்று திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான இளையோர் தடகள போட்டிகள் நடைபெற்றது.
இதில் 14, 16, 18, 20 என வயதின் அடிப்படையில் 4 பிரிவுகளாக 60 மீட்டர், 100 மீட்டர், 600 மீட்டர், 800 மீட்டர், 2000 மீட்டர், 3000 மீட்டர் ஓட்ட பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், மும்முறை தாண்டுதல் ஆகிய போட்டிகள் வீரர், வீராங்கனைகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டது.
600 பேர் பங்கேற்பு
இதில் 600-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் தகுதியின் அடிப்படையில் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கத் தலைவர் எ.வ.வே.கம்பன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.