பெரம்பலூர்
மாவட்ட அளவிலான மேஜைப்பந்து போட்டி
|மாவட்ட அளவிலான மேஜைப்பந்து போட்டி நடந்தது.
போட்டிகள்
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இடையே 2023-24-ம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான மேஜைப்பந்து மற்றும் இறகுப்பந்து போட்டிகள் 14, 17, 19 வயதுக்கு உட்பட்டவர்கள் என 3 பிரிவுகளின் கீழ் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஸ்வநாதன் தொடங்கி வைத்து வாழ்த்தி பேசினார்.
இதில் 14 வயதுக்கு உட்பட்ட ஆண்கள், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவிலும், இரட்டையர் பிரிவிலும் பெரம்பலூர் மரகதம் மெட்ரிக் பள்ளி அணிகள் வெற்றி பெற்றன. 17 வயதுக்கு உட்பட்டோர் ஆண்கள், பெண்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆகிய பிரிவுகளிலும் மரகதம் மெட்ரிக் பள்ளி அணிகள் வெற்றி பெற்றன.
மாநில போட்டிக்கு தகுதி
17 வயதுக்கு உட்பட்டோர் பெண்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் பெரம்பலூர் கோல்டன்கேட்ஸ் மெட்ரிக் பள்ளி அணிகளும், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மரகதம் மெட்ரிக் பள்ளி அணியும், இரட்டையர் பிரிவில் வி.களத்தூர் ஐடியல் மெட்ரிக் பள்ளி அணியும் வெற்றி பெற்றன. 19 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் லெப்பைக்குடிகாடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது.
மேஜைப்பந்து போட்டியில் 14 வயது மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் மரகதம் மெட்ரிக் பள்ளி அணிகள் வெற்றி பெற்றன. 17 வயதுக்கு உட்பட்ட பெண்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் கீழப்பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி அணியும், 19 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் மரகதம் மெட்ரிக் பள்ளி அணியும், இதே பிரிவில் பெண்களுக்கான ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் கீழப்பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி அணியும் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றன.