அரியலூர்
தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் மாவட்ட அளவிலான கபடி போட்டி
|தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் மாவட்ட அளவிலான கபடி போட்டி 26, 27-ந் தேதிகளில் நடக்கிறது.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் மாவட்ட அளவிலான கபடி போட்டிகள் நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரியின் தாளாளர் ரகுநாதன் கூறியதாவது:- கோவை ஈஷா மையம் சார்பில் ஈஷா கிராமோத்சவம் நிகழ்ச்சியின் கீழ் நடைபெற உள்ள மாநில அளவிலான கபடி போட்டிக்காக, மாவட்ட அளவிலான கபடி போட்டி மீனாட்சி ராமசாமி கல்லூரி வளாகத்தில் 26 மற்றும் 27-ந் தேதிகளில் நடைபெறுகிறது.
இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.12 ஆயிரம், ரூ.8 ஆயிரம், ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கப்படும். இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் முன்பதிவு செய்து கொள்ளவேண்டும். முன்பதிவு செய்யாதவர்கள் விளையாட அனுமதி கிடையாது.
மாவட்ட அளவில் வெற்றி பெறுகின்றவர்கள் செப்டம்பர் மாதம் 23-ந் தேதி நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்படுவார்கள். மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 லட்சமும், 2-வது பரிசாக ரூ.3 லட்சமும், 3-வது பரிசாக ரூ.1 லட்சமும், 4-ம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.