< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
மாவட்ட அளவிலான கபடி போட்டி
|29 Dec 2022 12:53 AM IST
மாவட்ட அளவிலான கபடி போட்டி நடந்தது.
தோகைமலை அருகே கொசூர் ஊராட்சி நாச்சிகளத்தில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. கரூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 32 அணிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில், முதல்பரிசை நாகனூர் செந்தமிழ் கபடி குழுவும், 2-வது பரிசை நரியம்பட்டி கேபி ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும், 3-வது பரிசை வரகூர் வசந்தகால பறவை அணியும், 4-வது பரிசை உப்பளிப்பட்டி உதயம் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் பெற்றன. பின்னர் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் கோப்பையும், தோல்வி அடைந்த அணிகளுக்கு சிறப்பு பரிசு களும் வழங்கப்பட்டன. இந்த கபடி போட்டியை சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த கபடி வீரர்கள், பொதுமக்கள் கண்டுகளித்தனர்.