கரூர்
மாவட்ட அளவிலான கபடி போட்டி
|மாவட்ட அளவிலான கபடி போட்டி நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கரூர் மாவட்ட அளவிலான பெண்கள் கபடி போட்டி நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமையாசிரியர் வைரமூர்த்தி தலைமை தாங்கினார். போட்டியை கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி தலைவர் சேதுமணி தொடங்கி வைத்தார். போட்டி 14, 17, 19 வயது என 3 பிரிவுகளாக தனித்தனியாக நடைபெற்றது. போட்டியில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
14 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான போட்டியில் கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடமும், எ.உடையாபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி 2-ம் இடமும், என். புதூர் அரசு உயர்நிலைப்பள்ளி 3-ம் இடமும் பிடித்தன. 17 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான போட்டியில் வாங்கல் எஸ்.டி. மேரிஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி முதலிடம், குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 2-ம் இடமும், காக்காவடி பி.ஏ.வித்யாபவன் பள்ளி 3-ம் இடமும் பிடித்தன. 19 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான போட்டியில் பஞ்சப்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி முதலிடமும், கீழவெளியூர் அரசு மேல்நிலைப்பள்ளி 2-ம் இடமும், வெள்ளியணை பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 3-ம் இடமும் பிடித்தன. இதையடுத்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.