< Back
மாநில செய்திகள்
மாவட்ட அளவிலான கையுந்து பந்து போட்டி
விருதுநகர்
மாநில செய்திகள்

மாவட்ட அளவிலான கையுந்து பந்து போட்டி

தினத்தந்தி
|
20 July 2022 12:55 AM IST

சிவகாசியில் மாவட்ட அளவிலான கையுந்து பந்து போட்டி நடைபெற்றது.

சிவகாசி,

சிவகாசி முஸ்லிம் பள்ளிகள் சார்பில் 2-ம் ஆண்டு கையுந்து பந்து போட்டி விருதுநகர் மாவட்ட அளவில் நடைபெற்றது. போட்டியினை சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன், கவுன்சிலர் வெயில்ராஜ் உள்பட பலர் கலந்து கொண் டனர். மாவட்டம் முழுவதும் இருந்து 30-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. இதில் ராஜபாளையத்தை சேர்ந்த நாடார் மேல்நிலைப்பள்ளி முதல் பரிசையும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஜி.எஸ்.இந்து மேல்நிலைப்பள்ளி 2-ம் பரிசையும், ஸ்ரீவில்லிபுத்தூர் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 3-வது இடத்தையும், வத்திராயிருப்பு நாடார் மேல்நிலைப்பள்ளி 4-வது இடத்தையும், சிவகாசி முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி 5-வது இடத்தையும் பெற்றனர். மேலும் ராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவன் செல்வமணி சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன், பள்ளியின் தாளாளர் முகைதீன்அப்துல்காதர், தலைமை ஆசிரியர் திருப்பதி, முகம்மது மதார் மரைக்காயர், கவுன்சிலர் ராஜேஷ், ஹயகிரிவாஸ் பள்ளி தாளாளர் ஜெயக்குமார், அன்வர்தீன், முகம்மது இம்தியாஸ், காஜாமைதீன் உள்பட பலர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு கேடயங்களையும், பரிசு பொருட்களையும் வழங்கினர். வெற்றி பெற்ற 5 அணிக்களுக்கான பரிசு கோப்பைகளை பள்ளியின் பழைய மாணவரும், மாநகராட்சி கவுன்சிலருமான வெயில்ராஜ் தனது சொந்த செலவில் வழங்கினார். போட்டிக்கான ஏற்பாடுகளை முஸ்லிம் பள்ளி நிர்வாகங்கள் சார்பில் செய்யப்பட்டிருந்தது.


மேலும் செய்திகள்