< Back
மாநில செய்திகள்
மாவட்ட அளவிலான கட்டுரை, பேச்சுப்போட்டி
கடலூர்
மாநில செய்திகள்

மாவட்ட அளவிலான கட்டுரை, பேச்சுப்போட்டி

தினத்தந்தி
|
7 July 2023 6:45 PM GMT

தமிழ்நாடு நாளை கொண்டாடும் வகையில் மாவட்ட அளவிலான கட்டுரை, பேச்சுப்போட்டி கடலூரில் 12-ந்தேதி நடக்கிறது.

தமிழ்நாட்டிற்கு "தமிழ்நாடு" என்று பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18-ந்தேதி "தமிழ்நாடு நாளாக" கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த நாளை கொண்டாடும் வகையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 6 -ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கட்டுரை, பேச்சுப்போட்டிகளை நடத்தி, போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு 10 ஆயிரம், 2-வது பரிசு ரூ.7 ஆயிரம், 3-வது பரிசு ரூ.5 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வருகிற 12-ந்தேதி (புதன்கிழமை) காலை 9 மணிக்கு கடலூர் சி.கே. பள்ளியில் நடக்கிறது. தமிழ் இலக்கிய வரலாற்றில் முத்தமிழறிஞர் கலைஞரின் சுவடுகள் என்ற தலைப்பில் கட்டுரை போட்டியும், தமிழ்த்திரை உலகத்தை புரட்டிப்போட்ட முத்தமிழறிஞர் கலைஞரின் எழுதுகோல் என்ற தலைப்பில் பேச்சுப்போட்டியும் நடக்கிறது. இந்த போட்டிகளுக்கு கடலூர் மாவட்டத்தில் உள்ள கல்வி மாவட்டத்திற்கு 25 பேர் வீதம் 2 கல்வி மாவட்டத்திற்கு 50 பேர் என 2 போட்டிகளுக்கு (கட்டுரை, பேச்சுப்போட்டி) 100 பேரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தேர்வு செய்து மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க அனுப்பி வைக்க வேண்டும். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்