அரியலூர்
மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி
|அறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி நடைபெற்றது.
அறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நேற்று காலை சைக்கிள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை சின்னப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அரியலூர் ஆர்.டி.ஓ. ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். போட்டியானது 13, 15, 17 வயதுக்குட்பட்டவர்கள் என்று 3 பிரிவுகளாக நடந்தது. இந்த போட்டிகளில் 235 மாணவர்கள், 206 மாணவிகள் என மொத்தம் 441 பேர் கலந்து கொண்டனர். மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் கலந்து கொண்டு முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு முறையே ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் என்ற வகையில் ரொக்கப்பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. 4 முதல் 10 இடங்களுக்குள் பெற்றவர்களுக்கு ரூ.250 ரொக்கப்பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின் தலைமையிலான அலுவலர்கள் செய்திருந்தனர்.