கரூர்
மாவட்ட அளவில் மாணவர்களுக்கு குத்துசண்டை போட்டி
|மாவட்ட அளவில் மாணவர்களுக்கு குத்துசண்டை போட்டி நடைபெற்றது.
கரூர் மாவட்டம், பண்டுதகாரன் புதூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மாவட்ட அளவிலான குத்துசண்டை போட்டி மாணவ- மாணவிகளுக்கு நடைபெற்றது. போட்டியை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெயலட்சுமி தொடங்கி வைத்தார். போட்டியை கரூர் மாவட்ட அமெச்சூர் கிக் பாக்சிங் தலைவர் மணியன், செயலாளர்கள் ரவிக்குமார், தமிழரசன், துணைச் செயலாளர் பிரியதர்ஷினி, துணைத் தலைவர் சதீஷ் ஆகியோர் முன் நின்று நடத்தினர். இந்த போட்டியில் கரூர், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகள் நடைபெற இருக்கும் மாநில மற்றும் தேசிய அளவிலான அமைச்சூர் கிக் பாக்சிங் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.