< Back
மாநில செய்திகள்
மாவட்ட ஆக்கி போட்டி
திருநெல்வேலி
மாநில செய்திகள்

மாவட்ட ஆக்கி போட்டி

தினத்தந்தி
|
6 Sept 2023 12:30 AM IST

பாளையங்கோட்டையில் மாவட்ட ஆக்கி போட்டி நடைபெற்றது.

ஆக்கி யூனிட் ஆப் திருநெல்வேலி சார்பில் நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு இடையேயான ஆக்கிப்போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவரும், ஓய்வு பெற்ற விளையாட்டு அலுவலருமான சேவியர் ஜோதி சற்குணம் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு போட்டியை தொடங்கி வைத்தார்.

நேற்று காலையில் நடந்த போட்டியில் சாராள் தக்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணியும், புனித குழந்தை ஏசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணியும் விளையாடின. இதில் 2-0 கோல் கணக்கில் சாராள் தக்கர் பள்ளி அணி வெற்றி பெற்றது.

இதைத்தொடர்ந்து மாணவர்களுக்கான போட்டியில் பாளையங்கோட்டை ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி அணியும், விக்கிரமசிங்கபுரம் பி.எல்.டபிள்யூ. மேல்நிலைப்பள்ளி அணியும் மோதின. இதில் 4-0 என்ற கோல் கணக்கில் ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்றது. போட்டியில் 32 அணிகள் பங்கேற்றன. இன்று (புதன்கிழமை) காலையிலும், மாலையிலும் போட்டி நடக்கிறது. மாலையில் இறுதி போட்டியும், பரிசளிப்பு விழாவும் நடக்கிறது.

மேலும் செய்திகள்