< Back
மாநில செய்திகள்
மாவட்ட கல்வி அலுவலக ஊழியர் விபத்தில் பலி
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

மாவட்ட கல்வி அலுவலக ஊழியர் விபத்தில் பலி

தினத்தந்தி
|
2 July 2022 6:47 PM IST

தூசி அருகே மாவட்ட கல்வி அலுவலக ஊழியர் விபத்தில் பலி

தூசி

காஞ்சீபுரம் மாவட்டம் அய்யங்கார்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயசாரதி (வயது 37).

இவர் திருவண்ணாமலை மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் தினமும் மோட்டார்சைக்கிளை அப்துல்லாபுரம் கூட்டுச்சாலையில் ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு, அங்கிருந்து பஸ் ஏறி திருவண்ணாமலைக்கு வேலைக்கு செல்வார்.

மாலை வேலை முடிந்ததும் பஸ்சில் அப்துல்லாபுரம் கூட்டுச் சாலைக்கு வந்து, மோட்டார்சைக்கிளை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு செல்வார்.

அதேபோல் நேற்று இரவு 10.30 மணியளவில் விஜயசாரதி வேலை முடிந்ததும் திருவண்ணாமலையில் இருந்து அப்துல்லாபுரத்துக்கு வந்து, ேமாட்டார்சைக்கிளை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார்.

அப்துல்லாபுரம் மின்வாரிய அலுவலகம் எதிரே சென்றபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று திடீரென மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட விஜயசாரதி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேேய பரிதாபமாக உயிரிழந்தார்.

இ்ந்த விபத்து குறித்து தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்